தமிழ்நாடு பசுமை சாதனையாளர் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்: தருமபுரி ஆட்சியர் தகவல்

தமிழ்நாடு பசுமை சாதனையாளர் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்: தருமபுரி ஆட்சியர் தகவல்
X

தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷிணி

தமிழ்நாடு பசுமை சாதனையாளர் விருதிற்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு 31.03.2022 வியாழக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு பசுமை சாதனையாளர் விருதிற்கு தருமபுரி மாவட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் / நிறுவனங்கள் / அமைப்புகள், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மேற்கொண்ட தங்களின் செயல்பாட்டை விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 31.03.2022- வியாழக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.ய

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி வெளியிட்ட தகவல்:தருமபுரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் செயல்படும் தனிநபர்/நிறுவனம்/தன்னார்வ அமைப்பு ஆகியோர்களை அங்கீகரித்து, ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு பசுமை சாதனையாளர் விருது வழங்க கடந்த 3.09.2021 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இவ்விருது பெற கீழ்கண்ட துறைகளில் ஈடுபாட்டுடன் செயல்படும் தகுதியான தனிநபர்/நிறுவனம்/தன்னார்வ அமைப்புகள் தேர்ந்தெடுக்கப்படஉள்ளது.

1.சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி (Environmental Education and Training)

2.சுற்றுச்சூழல் விழிப்புணர்வு (Environmental Awareness)

3.சுற்றுச்சூழல் பாதுகாப்பு (Environmental Protection)

4.அறிவியல் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் (Research and Scientific Studies)

5.நிலையான வளர்ச்சி (Sustainable Development)

6.திடக் கழிவு மேலாண்மை (Solid Waste Management)

7.நீர் பாதுகாப்பு மற்றும் நீர் நிலை பாதுகாப்பு (Water Conservation and water bodies protection)

8.காலநிலை மாற்றம் தழுவல் மற்றும் தணிப்பு (Climate Change adaptation and mitigation)

9.மாசு குறைப்பு (Emission Reduction)

10.நெகிழி பயன்பாட்டை குறைத்தல் மற்றும் மறுசுழற்சி செய்தல் (Control and Recycling of Plastic Waste)

11.சுற்றுச்சூழலை மறுசீரமைத்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் (Eco-restoration, Conservation Measures)

இவ்விருது பெற தகுதியான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் / நிறுவனங்கள் / அமைப்புகளை தருமபுரி மாவட்ட ஆட்சியரின் தலைமையிலான மாவட்ட விருதுக்குழுவின் மூலமாக தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுச்சூழல் தினமான ஜுன்-5ம் நாள் அன்று "தமிழ்நாடு பசுமை சாதனையாளர்" விருதும், ரூ1,00,000 ரொக்கப் பரிசுத் தொகையும் தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டிற்கான, தமிழ்நாடு பசுமை சாதனையாளர் விருதிற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 31.03.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பம் குறித்த தகவல்களுக்கு www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம். மேலும் தகவலுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், அதியமான் கோட்டை - ஓசூர் புறவழிச்சாலை, ஏ.ரெட்டிஅள்ளிகிராமம், தருமபுரி வட்டம் (ம) மாவட்ட அலுவலகத்தை அணுகலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!