தர்மபுரியில் உள்ளாட்சி பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்

தர்மபுரியில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளாட்சி பணியாளர்கள்.
தருமபுரி மாவட்ட ஏஐடியூசி முனிசிபல் பஞ்சாயத்து பொது பணியாளர் சங்கம்,கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் உள்ளாட்சி பணியாளர் சம்மேளனம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் மாநிலம் தழுவி, நடைபெறும் ஆர்பாட்டத்தின் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு இச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.மனோகரன் தலைமை வகித்தார்.முனிசிபல் பஞ்சாயத்து பொது பணியாளர் சங்க மாவட்டத் தலைவர்,பணிவண்ணன்,ராமன்,மருதய்யன் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் கே.புகழேந்தி வரவேற்றார்.
முனிசிபல் பஞ்சாயத்து மாவட்ட பொது செயலாளர் ஆர்.ராமமூர்த்தி கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினார்.ஏஐடியூசி உள்ளாட்சி பணியாளர் சம்மேளனத்தின் மாநில பொது செயலாளர் எம்.ராதாகிருஷ்ணன் கோரிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
ஆர்பாட்டத்தில் நகராட்சி,பேரூராட்சி,கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள்,தூய்மை காவலர்கள்,மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் அனைவரையும் முழு நேர பணியாளர்களாக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் வழங்க வேண்டும்.10.05.2000-க்கு பின்பு ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மாதம் ஊதியம் ரூ 250 பெறும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.வீடற்ற பனியாளர்களுக்கு வீட்டுமனை பட்டா,அடுக்குமாடி குடியிறுப்புகளில் வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
ஊராட்சிகளில் தினக்கூலியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு,பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.ஊராட்சி பணியாளர்களுக்கு தனி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.ஊதியத்தின் அடிப்படையில் பணி பதிவேடு பதிவு செய்ய வேண்டும்.முன்களப் பணியாளர்கள் என அறிவித்து மருத்துவத் துறை பணியாளர்களுக்கு வழங்கியதை போல பெருந்தொற்று கால நிவாரணங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைககள் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்பாட்டத்தில் ஏஐடியூசி மாவட்ட பொது செயலாளர் கே.மணி,மாவட்டத் தலைவர் எம்.மாதேஸ்வரன்,மாவட்ட துணைத் தலைவர் சுதர்சனன்,மாவட்ட துணை செயலாளர் ஆர்.நடராஜன்,தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் கெளரவ தலைவர் ரவீந்திரபாரதி மற்றும் நிர்வாகிகள் சரவணன்,கந்தசாமி,தமிழ்வாணன்,ராமன்,ராஜமாணிக்கம்,வணங்காமுடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu