கருவில் இருப்பது ஆணா?பெண்ணா?என கண்டறிய சோதனை செய்த 7 பேர் அதிரடி கைது

கருவில் இருப்பது ஆணா?பெண்ணா?என கண்டறிய சோதனை செய்த 7 பேர் அதிரடி கைது
X
தருமபுரி மாவட்டத்தில் கருவில் இருப்பது ஆணா?பெண்ணா?என கண்டறிய சோதனை செய்தபெண்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த மலையாண்டஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ராகவன். இவரது மனைவி வனஜா(வயது 27.) இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில் மீண்டும் கர்ப்பம் அடைந்தார். இதில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என அறிய தருமபுரியில் உள்ள ஸ்கேன் சென்டரை அனுகியுள்ளார்.இதில் இடைத்தரகர்கள் சிலர் உதவியுடன் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர் மூலம் கருவிலிருக்கும் குழந்தை பெண் என கண்டுபிடித்து அதனை கருகலைப்பு செய்தார். இதில் கருக்கலைப்பு முழுமை அடையாததால் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுக் கொண்டு கொடுத்த ரகசிய தகவலின் பேரில் தருமபுரி மாவட்ட மருத்துவத்துறை ஊரக பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கனிமொழி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இதில் தருமபுரி அருகே ராஜபேட்டை ஏரிக்கரை அருகே ஆட்டோ டிரைவர் வெங்கடேஷ் என்பவர் வீட்டில் கருவுற்ற பெண்கள் 6 பேருக்கு ஸ்கேன் செய்வதற்கு கூட்டி சென்றதாக ரகசிய தகவலின் படி டாக்டர் கனிமொழி தருமபுரி நகர காவல் ஆய்வாளர் நவாஸ் ,காவல் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட போலீசார் ராஜபேட்டையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜோதி வயது 33, சதீஷ்குமார்,37.சுதாகர்,37,தருமபுரி அருகே அழகாபுரி பகுதியை சேர்ந்த கற்பகம்,38, பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த சரிதா,40, பாரதிபுரம் பகுதியை சேர்ந்த குமார்,38. தருமபுரி செட்டிகரை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் வயது 33, ஆகிய ஏழு பேரும் பாலின தேர்வு தடை செய்தல் சட்டத்தின் படி, ஆட்டோ டிரைவர் வெங்கடேஷின் வீட்டில் 6 கர்ப்பிணி பெண்களை அழைத்து வந்து கற்பகம் மூலம் ஒரு ஸ்கேன் மிஷின் கொண்டு, தாங்கள் டாக்டர்கள் என்று கூறி கர்ப்பிணிப் பெண்களை ஏமாற்றி கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்கிற தகவலை சொல்லப்பட்டதை கண்டறியப்பட்டு, இதில் கற்பகம், ஜோதி சதீஷ் ஆகியோர் எவ்வித மருத்துவ படிப்பும் படிக்காமல் வெங்கடேசன் புரோக்கர் சரிதா மூலம் 6 கர்ப்பிணி பெண்கள் ஸ்கேன் பரிசோதனை செய்யும் இடத்திற்கு அழைத்து வந்தது கண்டறியப்பட்டது.


இவர்கள் மீது தருமபுரி நகர போலீசார் பாலினத் தேர்வு தடை சட்டத்தின்படி 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுவரை தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு கிராம பகுதிகளில் உள்ள கருவுற்ற பெண்களுக்கு கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பது கண்டறியப்பட்டு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.


இதேபோன்று தர்மபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் இதுபோன்று நடைபெறுவதாகவும் கருவில் இருப்பது பெண் சிசு என தெரிய வந்தால் உடனடியாக கருக்கலைப்பு செய்யப்படுவதாகவும் இதற்காக பல ஆயிரங்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது தெரியவந்தது மிகப் பெரிய நெட்வொர்க் ஆக இந்த நிகழ்வு நடந்து வருவதால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து சங்கிலித் தொடர் போல் இது நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!