தக்காளி ஏற்றி வந்த பிக்கப் வேன் கவிழ்ந்து விபத்து

தக்காளி ஏற்றி வந்த பிக்கப் வேன் கவிழ்ந்து விபத்து
X

நல்லம்பள்ளி அடுத்த சனி சந்தை அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கும் தக்காளி ஏற்றி வந்த வேன்.

தர்மபுரி அருகே தக்காளி ஏற்றி வந்த பிக்கப் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கர்நாடக மாநிலம், பெங்களூர் ஒசகோட்டா பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார், கணேஷ், ஆகிய இருவரும் ஆந்திராவில் இருந்து பிக்கப் வேனில் தக்காளி ஏற்றிக்கொண்டு திருப்பூரில் விற்பதற்காக கிருஷ்ணகிரி சேலம் பைபாஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் நேற்று இரவு 9 மணி அளவில் தர்மபுரி அடுத்த தொப்பூர் அருகே உள்ள சனி சந்தை எந்த இடத்தில் வரும்போது டிரைவர் கிருஷ்ணமூர்த்தியின் கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக மூன்று பேரும் உயிர் தப்பினர்.

சம்பவ இடத்திற்கு வந்த தொப்பூர் போலீசார் அவர்களை மீட்டு முதலுதவி செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story