அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
X

தர்மபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.26.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம், குறிஞ்சி நகரில் இயங்கி வரும் கிருஷ்ணகிரி, தொப்பூர் டோல் ரோடு, பாளையம் சுங்கச்சாவடி நிறுவனம் சார்பில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பாளையம்புதூர், தொப்பூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ சிகிச்சை உபகரண கருவிகள் மற்றும் பூவல்மடுவு, கீழ்பூரிக்கல், மேல்பூரிக்கள் ஆகிய அரசு பள்ளிகளுக்கு ஸ்மார்ட் எல்இடி டிவிகள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் என ரூ.26.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி - தொப்பூர் டோல் ரோடு திட்ட தலைவர் சதீஸ்குமார், இயக்க மேலாளர் நரேஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். அரசு மருத்துவக் கல்லூரி டீன் அமுதவள்ளி, வட்டார மருத்துவ அலுவலர் வாசுதேவன், டாக்டர்கள் சண்முகம், வாசுதேவன், அருள்மொழி மற்றும் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் முனியப்பன், பழனியம்மாள், அஞ்சலா ஆகியோர்களிடம் ரூ. 26.50 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சுங்க சாவடி கணக்கு மற்றும் நிர்வாக மேலாளர் ஜோஸ்லின் ஸ்மைல், பராமரிப்பு மேலாளர் சின்னதுரை, மின்னியல் மேலாளர் வேங்கடசாமி பேச்சட்டி, சுங்க சாவடி பணியாளர்கள் ஞானசேகர், லோகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். அரசு மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் வழங்கிய சுங்கச்சாவடி நிறுவனத்திற்கு அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!