தருமபுரி மாவட்டத்தில் அதிகாலை முதல் சாரல் மழை

தருமபுரி மாவட்டத்தில் அதிகாலை முதல் சாரல் மழை
X
இன்று அதிகாலை முதலே இண்டூர், பென்னாகரம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, காரிமங்கலம், மொரப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாட்டி வதைத்த வெயிலால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்பட்டிருந்தனர். நேற்று மாலை முதல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்தது.

அந்த வகையில், இன்று அதிகாலை முதலே இண்டூர், பென்னாகரம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, காரிமங்கலம், மொரப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதனால் சற்று குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மேலும், மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!