தருமபுரி போலீஸ் டிஎஸ்பி.,க்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மேற்கு மண்டல ஐஜி

தருமபுரி போலீஸ் டிஎஸ்பி.,க்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மேற்கு மண்டல ஐஜி
X

டிஎஸ்பி., வினோத்திற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர்.

தருமபுரி போலீஸ் டிஎஸ்பி., வினோத்தின் சிறந்த பணியை பாராட்டி மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

தருமபுரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வினோத்தின் சிறந்தபணியை பாராட்டி மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

தருமபுரி உட்கோட்டத்தில் முக்கிய இடங்களில் குற்றவாளிகளை அடையாளம் காண சிசிடிவி கேமரா பொருத்துவது, பொதுமக்களுக்கு சிறப்பு முகாம் ஏற்படுத்தி மனுவின் மீதான பிரச்சனைகளை தீர்ப்பது, தலைமறைவு குற்றவாளிகளை கண்டுபிடிப்பது, போக்குவரத்து சரி செய்வது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு உதவி எண்கள் குறித்தும் சைபர் குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் லாட்டரி, குட்கா, போதை ஊசி மாத்திரைகளை விற்பனை செய்து வரும் சமூக குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது என சிறப்பான நிர்வாகத்தை செயல்படுத்தி வரும் நமது தருமபுரி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் வினோத். அவர்களின் பணியை பாராட்டி மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன் உடன் இருந்து தனது பாராட்டை தெரிவித்தார் .

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!