பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள்

பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள்
X

தர்மபுரியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடிகளை தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. பதற்றமானவை மற்றும் மிக பதற்றமான வாக்குசாவடிகள் குறித்து கண்டறியப்பட்டு வருகிறது.இதில் தர்மபுரி மாவட்டத்தில் மிக பதற்றமான 204 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொறுத்த முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தர்மபுரியில் 420 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், மிக பதற்றமான 204 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதனை தலைமைத் தேர்தல் அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்கும் வகையில் அமைக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!