தர்மபுரி மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா

தர்மபுரி மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா
X
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.



தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு அதிகரித்து வருகிறது. இதனால் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் 6,789 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,682 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். அதே நேரத்தில் நேற்று 5 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.தற்போது 52 பேர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 55 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!