விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகள் ஆட்சியரிடம் வாழ்த்து

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகள் ஆட்சியரிடம் வாழ்த்து
X

ஆட்சியரிடம் வாழ்த்துபெறும் வீரர், வீரங்கனைகள்.

மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற தருமபுரி மாவட்ட வீரர், வீராங்கனைகள் மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவின் சார்பில் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற தருமபுரி மாவட்ட வீரர், வீராங்கனைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் பிப்ரவரி-2023 மாதத்தில் நடைபெற்றது. மாவட்ட அளவிலான பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசு பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் இருபாலருக்கும் நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து 30.06.2023 முதல் 25.07.2023 வரை மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்திலிருந்து 564 வீரர் வீராங்கனைள் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.

மாநில அளவிலான போட்டிகளில் தருமபுரி மாவட்டத்தை சார்ந்த எம்.தனுஷ், சிலம்பம் போட்டியில் ஒற்றை சுருள் வாள்வீச்சு பிரிவில் தங்கப்பதக்கத்தையும், எஸ்.வி.அருண்குமார், பொதுப்பிரிவினருக்கான தடகள போட்டியில் 100மீ பிரிவில் வெண்கலப்பதக்கத்தையும், பொதுப்பிரிவினருக்கான பெண்கள் கபாடி போட்டியில் தருமபுரி அணி வெண்கலப்பதக்கத்தையும் வென்று தருமபுரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற தருமபுரி மாவட்ட வீரர், வீராங்கனைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்வின்போது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி மற்றும் பயிற்சியாளர்கள் தினேஷ் சந்தோஷ்குமார் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story
why is ai important to the future