தர்மபுரி மாவட்ட வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களை ஆட்சியர் ஆய்வு

தர்மபுரி மாவட்ட வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களை ஆட்சியர் ஆய்வு
X

அதகபாடி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் நேரில் சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தர்மபுரி மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்கள் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சாந்தி, தருமபுரி நகராட்சி 4 ஆவது வார்டிற்குட்பட்ட சாலை விநாயகர் கோயில் ரோடு, நகராட்சி நடுநிலைப்பள்ளி, தருமபுரி வட்டம், அதகபாடி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இவ்வாக்குச்சாவடி மையங்களில் இருந்த வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம் வாக்காளர்களுக்கு வழங்குவதற்கு தேவையான அனைத்து படிவங்களும் தயார் நிலையில் இருக்கின்றதா என்பதை கேட்டறிந்தார்கள். மேலும் இம்முகாமிற்கு வருகைத்தரும் வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளை மேற்கொள்வதற்கான உரிய படிவங்களையும், ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்திட படிவம் 6B- யை படிவத்தினையும் வழங்குவதோடு, அவற்றை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அப்படிவங்களை பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்கள் இன்று நடைபெற்றுவருகின்றது. இதன்படி 57-பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் 184 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 272 வாக்குச்சாவடிகளிலும், 58- பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் 178 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 294 வாக்குச்சாவடிகளிலும், 59- தருமபுரி சட்டமன்ற தொகுதியில் 161 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 306 வாக்குச்சாவடிகளிலும், 60- பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் 184 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 314 வாக்குச்சாவடிகளிலும், 61அரூர் (தனி)சட்டமன்ற தொகுதியில் 171 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 299 வாக்குச்சாவடிகளிலும் என் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிளும் மொத்தம் 878 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 1,485 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்கள் நடைபெற்றன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, 01.01.2023-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைபவர்கள் மற்றும் 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் 18 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ளும் வகையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்கள் நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொண்டு 18 வயது நிரம்பிய அனைவரும் அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று, தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம்-6 பூர்த்தி செய்தும், ஏற்கனவே வாக்காளராக பதிவு செய்துள்ளவர்கள் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் அல்லது வேறு தொகுதிக்கு மாற்றச்செய்ய விரும்பினால், அதற்கு படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும், ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்திட படிவம் 6B-யை பூர்த்தி செய்தும், வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் அந்தந்த வாக்குச் சாவடிகளில் வழங்கலாம்.

பொதுமக்கள் மேற்கண்ட வசதிகளை தங்கள் வீடுகளிலிருந்தே இணையதளம் மூலம் விண்ண ப்பிக்க www.nvsp.in என்ற இணையதள முகவரியில், Apply Online/Correction of entries என்ற லிங்க் மூலம் விண்ண ப்பிக்கலாம். செல்போனில் Voters Helpline App என்ற செயலியை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 1950 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு, கூடுதல் விவரங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்கள் நாளை 13.11.2022, ஞாயிற்றுக்கிழமை அன்றும், வருகின்ற 26.11.2022 சனிக்கிழமை மற்றும் 27.11.2022 ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

எனவே பொதுமக்கள் வாக்காளர் பட்டியல் -2023 சிறப்பு சுருக்கத் திருத்த சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொண்டு 01.01.2023-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் 18 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள உரிய படிவங்களில் விவரங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களோடு இணைத்து அவ்விண்ணப்பகளையும் மற்றும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்திட படிவம் 6B-யை பூர்த்தி செய்தும், அந்தந்த வாக்குச் சாவடிகளில் உள்ள வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கலாம். அல்லது மேற்குறிப்பிட்டுள்ள இணையதள முகவரி மூலமாகவும் விண்ணபிக்கலாம்.

எனவே, பொதுமக்கள் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெறுகின்ற வாக்காளர் பட்டியல் -2023 சிறப்பு சுருக்கத் திருத்த சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொண்டு, இம்முகாம்களில் 01.01.2023 -ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் இதுவரை தங்களது பெயரினை சேர்க்காதவர்கள் மற்றும் 18 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளை உரிய படிவங்களில் விவரங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களோடு இணைத்து விண்ணபிக்கலாம் அல்லது இணையதளம் மூலமாகவும் விண்ணபித்து, தருமபுரி மாவட்டத்தில் 18 வயது நிறம்பிய அனைவரும் கட்டாயம் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்திட வேண்டும்.

இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது தருமபுரி வருவாய்க் கோட்டாட்சியர் (பொ) / மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெ.ஜெயக்குமார், தருமபுரி வருவாய் வட்டாட்சியர் தன.ராஜராஜன், தருமபுரி நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!