வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

பாதாள சாக்கடை பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

தர்மபுரி நகராட்சிபகுதியில் மழைநீர் தேங்கும் இடங்களை மாவட்ட ஆட்சியர் சாந்தி, நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்

தமிழகத்தில் அடுத்த மாதம் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதையொட்டி தர்மபுரி நகராட்சி, கொல்ல அள்ளிரோடு பகுதியில் மழைநீர் தேங்கும் இடங்களை மாவட்ட ஆட்சியர் சாந்தி, நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து குமாரசாமிபேட்டை, பென்னாகரம் ரோடு 10-வது வார்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையின் குறுக்கே கல்வெட்டு அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்து, பணியினை விரைவாக முடித்திட அறிவுறுத்தினார்.

பின்னர் தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை இணைப்பு பணியினை நேரில் ஆய்வு செய்தார். மேலும், வருகின்ற வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, நகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கா வண்ணம் தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.

இந்த ஆய்வில் நகராட்சி ஆணையாளர் புவனேஷ்வரன், நகராட்சி பொறியாளர் புவனேஷ்வரி, துப்புரவு அலுவலர் ராஜ ரத்தினம், நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
highest paying ai jobs