ஒகேனக்கல் சுற்றுலாதலத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

ஒகேனக்கல் சுற்றுலாதலத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு
X

ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தில் வளர்ச்சி பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் மாவட்ட சுற்றுலா துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆட்சியர் சாந்தி ஆய்வு செய்தார்.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் சுற்றுலாத்துறை மூலம் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை சர்வதேச அளவில் மேம்படுத்த அரசு தமிழக அரசு திட்டமிட்டது. அதைத் தொடர்ந்து இப்பணிகளை மேற்கொள்ள ரூ.17.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. இத்திட்டப் பணிகளுக்காக, ஒகேனக்கலில் 3.10 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நுழைவு வாயில், பார்வையாளர் மாடம், பரிசல் நிறுத்துமிடம், எண்ணெய் குளியலுக்கான இடங்கள், உடைமாற்றும் அறை மற்றும் பாதுகாப்புடன் குளிக்க வசதி ஏற்படுத்துதல், டிக்கெட் கவுன்ட்டர், பரிசல் நிறுத்துமிடம், மசாஜ் பகுதி, ஆழ்குழாய் கிணறு, உணவகம், சொகுசு நடைபாதை, எண்ணெய் கழிவு சுத்திகரிப்பு நிலையம், காட்சி கோபுரம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோன்று ஊரக வளர்ச்சித் துறை மூலமும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தி, நேரில் பார்வையிட்டு பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

மேலும் ஒகேனக்கலை அடுத்த மஞ்சகொடம்பு என்ற வனப்பகுதியில் இருளர் மக்களுக்கு கட்டப்பட்டு வரும் குடியிருப்பு பணிகளை நேரில் பார்வையிட்ட ஆட்சியர் சாந்தி பின்னர்அங்குள்ள பள்ளி மாணவர்களிடையே உரையாடினார். பள்ளி வயது குழந்தைகள் அனைவரும் தவறாமல் பள்ளிக்கு தொடர்ந்து செல்ல வேண்டும் என்றும், கல்வியை பெற்று எதிர்காலத்தில் சிறந்த வர்களாக திகழ வேண்டும் என்றும் மாணவிகளிடையே மாவட்ட ஆட்சியர்தெரிவித்தார்.

தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமான ஒகேனக்கலில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை நேரில் பார்வையிட்டு அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், நவீனப்ப டுத்தப்பட்டுள்ள மருத்துவ வசதிகள் குறித்தும் ஆட்சியர் கேட்டறிந்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த ஆய்வின்போது வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!