ஏரியூர் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவு

ஏரியூர் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவு
X

ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏரியூரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வரும் பணியினையும், சுஞ்சல் நத்தம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.24.54 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டு, மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளையும் தரமாகவும், விரைவாகவும், குறிப்பிட்ட கால அளவிற்குள் விரைந்து முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு ஆட்சித்தலைவர் அவர்கள் உத்திரவிட்டார்.

இந்த ஆய்வின் போது, பென்னாகரம் வட்டாட்சியர் திரு. அசோக்குமார், ஏரியூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.ஆர் ஆறுமுகம், திரு.மா.ஜெயராமன், உதவிப்பொறியாளர் திரு. சீனிவாசன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai healthcare products