/* */

மாநில இளைஞர் விருது பெற இளைஞர்கள் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

மாநில இளைஞர் விருது பெற 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்க தர்மபுரி ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

மாநில இளைஞர் விருது பெற இளைஞர்கள் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
X

தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி.

முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுபெற தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 15 முதல் 35 வயதிற்குட்பட்ட தகுதிவாய்ந்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வௌியிட்டுள்ள அறிக்கையில், சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் விதமாக 'முதலமைச்சர் மாநில இளைஞர் விருது' ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ரூ.1,00,000/- ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாகும்.

அதன்படி 2022ம் ஆண்டிற்கான இந்த விருது வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெறும் சுதந்திர தினவிழாவில் தமிழக முதலமைச்சரால் வழங்கப்படவுள்ளது.

தகுதிகள்:

  • 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்கள் பெண்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். 01.04.2022 அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் அல்லது 3103.2022 அன்று 35 வயதிற்குள்ளாக இருத்தல் வேண்டும்.
  • கடந்த நிதியாண்டில் (2021-2022) அதாவது 01.04.2021 முதல் 31.03.2022 வரை. மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
  • விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்படவேண்டும்)
  • விண்ணப்பதாரார்கள் சமுதாய நலனுக்காக தொண்டாற்றியிருப்பவர்களாக இருத்தல் வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
  • மத்திய மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழங்கள் கல்லூரிகள் / பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.
  • விண்ணப்பதாரருக்கு உள்ளூர் சமுதாய மக்களிடம் செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

இந்த விருதுபெற 15 முதல் 35 வயதிற்குட்பட்ட தகுதிவாய்ந்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதிற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் http://sdat.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசிநாள் மற்றும் நேரம் : 10.05.2022 மாலை 4.00 மணி. எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள தகுதிவாய்ந்த இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 28 April 2022 8:12 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?