சுட்டெரிக்குது வெயிலு... குளத்திலே ஆனந்த குளியலு... சிறுவர்கள் ஜாலி!

சுட்டெரிக்குது வெயிலு... குளத்திலே ஆனந்த குளியலு... சிறுவர்கள் ஜாலி!
X
தருமபுரி பகுதியில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், சிறுவர்கள் குளத்தில் ஆனந்த குளியல் போட்டு, சூரியனின் சூட்டை சமாளித்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் வாட்டி வதைத்த வெயிலுக்கு இடையில், நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக, வெப்பம் சற்றுகுறைந்து காணப்பட்டது.

இதனிடையே இன்று காலை முதலே வெப்பம் அதிகமாகவே காணப்பட்டது. இதனை சமாளிப்பதற்காக சிறுவர்கள் குளத்தில் ஆனந்தமாக குளியல் போட்டு வருகின்றனர்.

தருமபுரியில் இருந்து அரூர் செல்லும் வழியில், மொரப்பூர் அருகே கர்த்தாங்குளம் என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தின் சிறப்பே அங்குள்ள குளம்தான். அந்த குளத்தில் தற்போது நீர் அதிகமாகவே உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, தற்போது அடிக்கும் வெயிலை சமாளிக்க, குளத்தில் இதமாக ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

Tags

Next Story
future of ai in retail