அடுக்குமாடி குடியிருப்பு வீடு கோரி விண்ணப்பிக்க அழைப்பு
தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வீடு கோரி விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சி மற்றும் அருகில் உள்ள கொண்டஹரஹள்ளி மற்றும் காரிமங்கலம் வட்டம், காரிமங்கலம் பேரூராட்சி மற்றும் அருகில் உள்ள முக்குளம் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் பெற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சி அருகில் உள்ள கொண்டஹரஹள்ளி மற்றும் காரிமங்கலம் வட்டம் &பேரூராட்சி அருகில் உள்ள முக்குளம் பகுதிகளில் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்த வீடுகளுக்கான பயனாளிகள் தேர்வுசெய்யப்பட உள்ளதால் தருமபுரி மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட திட்டப்பகுதிக்கு பொ.மல்லாபுரம் மற்றும் காரிமங்கலம் பேரூராட்சி அருகில் வசித்து வரும் சொந்த வீடில்லாத பொதுமக்கள்விண்ணப்பிக்கலாம்.
குடும்பத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளார் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், குடும்பத்தாரின் புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். பயனாளிகள் ஆண்டு வருமானம் 3 இலட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும்.
இக்குடியிருப்புக்கு அரசினால் நிர்ணயிக்கப்பட்ட பயனாளி பங்கீட்டு வாரியத்திற்கு முன் பணமாக செலுத்த வேண்டும். குடும்பத்தினருக்கு, சொந்த வீடோ, நிலமோ இல்லை எனவும் அரசு வழங்கும் குடியிருப்பை விற்கவோ அல்லது குத்தகைக்கு விட மாட்டேன் என்ற உறுதிமொழி படிவம் சமர்ப்பிக்க வேண்டும்.
சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள்:
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu