கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணம் பெற அழைப்பு
தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி.
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவதற்கு www.tn.gov.in இணையத் தளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் (Death Ascorting Committee) மூலம் பரிசீலிகப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 1243 மனுக்கள் பெறப்பட்டு 1040 இனங்களுக்கு ரூ.50,000/- வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 126 மனுக்கள், இருமுறை பெறப்பட்ட மனு என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், மாண்புமிகு உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில், கடந்த 20.03.2022-க்கு முன்னர் இறந்தவர்களுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வரும் 60 நாட்களுக்குள் (18.05.2022 தேதிக்குள்) மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
கடந்த 20ம் தேதிக்குப்பின் இறந்தவர்களுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட நிர்வாகம் 30 தினங்களுக்குள் தீர்வு காண வேண்டும்.
இந்த காலக் கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் (District Revenue Officer) தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும்.
எனவே, கோவிட்-19 தொற்று நோயின் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினரு மேற்கண்ட உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி, உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu