யூ டியூபில் ஆபாச பேச்சு: 'பப்ஜி' மதன் தருமபுரியில் கைது

யூ டியூபில் ஆபாச பேச்சு: பப்ஜி மதன் தருமபுரியில் கைது
X
யூ டியூப் சேனலில் ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கிய 'பப்ஜி' மதன் தருமபுரியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆன்லைன் விளையாட்டு மூலமாக சிறுவர்கள் மற்றும் பெண்களை ஆபாசமாகப் பேசி யூடியூப் சேனலில் பதிவிட்டுவந்த மதன் என்ற நபர் மீது புகார்கள் குவிந்தன.

இதுதொடர்பாக 2 புகார்கள் கொடுக்கப்பட்ட நிலையில், அந்த இரண்டு புகார்களின் அடிப்படையில் சைபர் க்ரைம் போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தார்கள். ஆனால், இதுவரை மதன் ஆஜராகவில்லை. இதனிடையே, அவரது மனைவி கிருத்திகாவை, போலீசார் கைது செய்து சென்னையில் விசாரித்து வந்தனர்.

'பப்ஜி' மதனை போலீசார் தேடி வந்த நிலையில், இன்று காலை தருமபுரியில் கைது செய்தனர். அவரிடம் இருந்து லேப்டாப்புகள், கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை அழைத்து வந்து மதனை விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags

Next Story
AI மூலம் உங்களுக்கான சரியான வேலையை கண்டறிவது எப்படி?