தர்மபுரி இளைஞர்கள் கவனத்திற்கு.. நாளை (12ம் தேதி) வேலைவாய்ப்பு முகாம்

தர்மபுரி இளைஞர்கள் கவனத்திற்கு..  நாளை (12ம் தேதி) வேலைவாய்ப்பு முகாம்
X

பைல் படம்.

அதியமான் கோட்டை ஊராட்சியில் நாளை (12ம் தேதி) வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சியில் நாளை (12ம் தேதி) தருமபுரி தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு நடத்தும் வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சியில் வேலையற்ற ஆண், பெண் இருபாலருக்கும் (இளைஞர்களுக்கு) பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் வரும் 12ம் தேதி (நாளை) காலை 10.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை நடைபெற உள்ளது.

எனவே வட்டார அளவிலான வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 12.03.2022 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை நல்லம்பள்ளி வட்டம். அதியமான் கோட்டத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமிற்க்கு தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது முதல் 40 வயது வரையிலான படிக்காத மற்றும் 8 ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ.பாலிடெக்னிக், B.E படித்த வேலையில்லா இளைஞர்கள் (ஆண்,பெண் இருபாலரும்) கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்