பொம்மிடியில் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க முயற்சி: ஒருவர் கைது

பொம்மிடியில் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க முயற்சி: ஒருவர் கைது
X

பைல் படம்.

பொம்மிடியில் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க முயற்சி செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், பொம்மிடியில் உள்ள ஒரு ஏ.டி.எம் எந்திரத்தில் கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்றது. அப்போது அலாரம் ஒலித்த நிலையில், வங்கி மேலாளர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சப்இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த கொள்ளை முயற்சியில் மெனசியை சேர்ந்த முகமது அலி (25) என்பவர் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story