10, 11, 12ம் வகுப்பு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணாப்பங்கள் வரவேற்பு
பைல் படம்.
தர்மபுரி மாவட்டத்தில் 10, 11, 12ம் வகுப்பு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணாப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து, இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஏற்கனவே நேரடித் தனித்தேர்வராக மேல்நிலை முதலாமாண்டு (+1) தேர்வெழுதி பொதுத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற / தேர்ச்சி பெறாத / வருகை புரியாத தேர்வர்கள் அனைவரும், தற்போது மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வெழுதுவதற்கும், முதலாம் ஆண்டு (+1) தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.
விண்ண ப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள், 09.03.2022 (புதன் கிழமை) முதல் 16.03.2022 (புதன் கிழமை) வரையிலான நாட்களில் (13.03.2022 ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு (Service centres) நேரில் சென்று இணையதளம் மூலம் தங்களது விண்ண ப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கத் தவறியவர்கள் 18.03.2022 (வெள்ளிக்கிழமை) முதல் 21.03.2022 (திங்கட்கிழமை) வரையிலான நாட்களில் (20.03.2022 ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்திற்கு நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000/- (மேல்நிலை) / ரூ.500 (பத்தாம் வகுப்பு) சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்- லைனில் தக்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களின் (Government Examinations Service centres) விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி, அறிவுரைகள் மற்றும் தேர்வுக் கால அட்டவணைகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu