2021-22-ம் ஆண்டிற்கான மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2021-22-ம் ஆண்டிற்கான மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
X

தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி.

2021-22-ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியோர்களுக்கு மணிமேகலை விருது வழங்குவதற்கான அறிவிப்பை கடந்த 15.11.2021-ன்படி ரூ.208 கோடி ஒதுக்கடு செய்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

எனவே 2021-22-ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கு தகுதியான சமுதாய அமைப்புகளிடமிருந்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விருதிற்கு தகுதியான சமுதாய அமைப்புகளிடமிருந்து வட்டார இயக்க மேலாண்மை அலகிலிருந்து 05.04.2022-தேதிக்குள் விண்ணப்பங்களை பெற்று பரிசீலித்து 6 காரணிகளின் அடிப்படையில் தரமதிப்பீடு செய்து தகுதியான சமுதாய அமைப்புகளின் கருத்துருக்களை உரிய ஆவணங்களை ஆய்வு செய்து ஒவ்வொரு சமுதாய அமைப்பிற்கும் இறங்குவரிசைப்படி பட்டியல் தயார் செய்து முதல் மதிப்பெண் வாங்கிய சமுதாய அமைப்புகளை மாவட்ட அளவில் திட்ட இயக்குநர் மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் விண்ணப்பித்த சமுதாய அமைப்புகளின் கருத்துகளை நேரில் ஆய்வு செய்து மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு 15.04.2022-தேதிக்குள் அனுப்பிட வேண்டும் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி