போலி சான்றிதழ் கொடுத்து ஊராட்சி செயலாளர் பணியில் சேர்ந்ததாக வழக்கு

போலி சான்றிதழ் கொடுத்து ஊராட்சி செயலாளர் பணியில் சேர்ந்ததாக வழக்கு
X

பைல் படம்.

நல்லம்பள்ளி வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் கார்த்திகேயன் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எர்ரபையனஅள்ளி ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருபவர் கார்த்திகேயன். இவர் தர்மபுரி மாவட்டம் பங்கு நத்தம் அடுத்த பண்ட அள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவிட்டு 16.5.1998-ம் வருடம் முதல் நல்லம்பள்ளி ஊராட்சி அலுவலகத்தில் செயலாளராக பணிக்கு சேர்ந்து பணிபுரிந்து வந்தார்.

அவருடைய 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை உண்மை தன்மை அறியும் பொருட்டு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குனருக்கு அனுப்பியும் அவர்கள் மூலமாக சென்னைக்கு அனுப்பி 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை சரிபார்க்கப்பட்டது.

அதில் கார்த்திகேயன் பத்தாம் வகுப்பு ஆங்கில பாடத்தில் 27 மதிப்பெண்கள் எடுக்கப்பட்டு அதனை திருத்தம் செய்யப்பட்டு 47 மதிப்பெண் பெற்றுள்ளதாக பொய்யான சான்றிதழை கொடுத்து பணியில் சேர்ந்துள்ளதாக தெரியவந்தது.

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் தேர்ச்சி பெற்றதாக போலியான மதிப்பெண் சான்றிதழை அளித்து பணியில் சேர்ந்ததாக நல்லம்பள்ளி வட்டாட்சியர் தர்மபுரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். இது குறித்து தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறினார்.

அதன் அடிப்படையில் தர்மபுரி காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜோசப் பாதம் உத்தரவின் பெயரில் தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கார்த்திகேயன் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!