போராட்டத்தில் உயிரிழந்தத விவசாயி குடும்பத்திற்கு 5 லட்சம் நிவாரணநிதி -முதல்வர் உத்தரவு

போராட்டத்தில் உயிரிழந்தத விவசாயி குடும்பத்திற்கு 5 லட்சம் நிவாரணநிதி -முதல்வர் உத்தரவு
X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  

தர்மபுரி மாவட்டம் பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், கரியப்பன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் என்பவர் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்த செய்தியைக் கேட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த விவசாயி கணேசன் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட ஆணையிட்டுள்ளார்.

மேலும், "முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு, என்றென்றும் விவசாயிகளுக்கு உற்றதோழனாக இருக்கும்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!