தர்மபுரிக்கு கொரோனா தடுப்பூசிகள் வருகை

தர்மபுரிக்கு கொரோனா தடுப்பூசிகள் வருகை
X

தர்மபுரி மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 11800 கொரோனா தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மருத்துவர் இளங்கோவன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் ஜெமினி, மற்றும் உயர் அதிகாரிகள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள இதுவரை 10850 பேர் முன்பதிவு செய்துள்ளனர். மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 11800 கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன. ஒருநாளைக்கு 400 நபர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நான்கு இடங்களில் ஒரு நாளைக்கு தலா நூறு பேர் வீதம் 400 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. மருந்து உடலில் செலுத்திய பின்னர் பக்க விளைவுகள் வருவது குறித்து கண்காணிக்கப்பட்டு பின்னர் வீட்டிற்கு அனுப்புவது குறித்தும், தயார் நிலையில் முதலுதவி சிகிச்சை,ஆம்புலன்ஸ் ஏற்பாடுகள் என பல்வேறு ஆலோசனைகள் இந்த கூட்டத்தில் நடைபெற்றது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!