/* */

சித்ரா பவுர்ணமி: மங்கலதேவி கண்ணகி கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு

கேரளாவை ஒட்டி தமிழக வனஎல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில், சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

HIGHLIGHTS

சித்ரா பவுர்ணமி: மங்கலதேவி கண்ணகி கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு
X

கண்ணகி கோயில் வளாகத்திற்குள் குவிருந்திருந்த பக்தர்கள்.

தமிழக - கேரள எல்லையில் தமிழக வனப்பகுதியில் உள்ள கண்ணகி கோயிலுக்கு, கேரளாவில் உள்ள மலைப்பாதை வழியாக செல்ல வேண்டும். குமுளியில் இருந்து பதிமூன்று கி.மீ., துாரம் மலைப்பாதையில் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் இன்று ஒரு நாள் மட்டும் அனுமதி உண்டு. தமிழக கேரள வருவாய்த்துறை, போலீஸ்துறை, வனத்துறை அதிகாரிகள் இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்தனர்.

சித்ராபவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு கண்ணகியை வழிபட நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

பக்தர்களுக்கு குடிநீர் வசதி, உணவு வசதி, மருத்துவ முதலுதவி வசதிகள் செய்யப்பட்டிருந்தன. காலை ஐந்து மணி முதல் மதியம் இரண்டு மணி வரை பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதித்தனர். கோயிலில் இருந்து மாலை ஆறு மணிக்குள் வெளியேறி விிட வேண்டும். அதேபோல் பக்தர்கள் வெளியேறி விட்டனர்.

தமிழர்கள் கண்ணகியை தமிழ் கடவுளாகவும், கற்புக்கரசியாகவும், கற்புடை தெய்வமாகவும் வழிபட்டனர். கேரள மக்கள் கண்ணகியை, கேரளத்து காளியாக வழிபட்டனர். காலை முதல், மாலை வரை வந்த பக்தர்கள் எண்ணிக்கை நான்கு இலக்கத்தில் பல ஆயிரத்தை எட்டும். சாமி கும்பிட ஒரு மணி நேரம் முதல், ஒண்ணரை மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டி இருந்தது என பக்தர்கள் தெரிவித்தனர்.

Updated On: 16 April 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது