சென்னையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு நிலை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சென்னையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு நிலை:  பொதுமக்களுக்கு எச்சரிக்கை
X

வானிலை ஆய்வு மைய படம்.

சென்னையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை வானிலை நிலையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதனால் சென்னை, அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகள், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் தற்போது கனமழை பெய்து வருகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, இன்று காலை 8.30 மணிக்கு சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 130 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு-வடகிழக்கே 150 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது மணிக்கு 4 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் (இன்று மாலை) தெற்கு ஆந்திரா கடற்பகுதிக்கும் வட தமிழக கடற்பகுதிக்கும் இடையில் சென்னைக்கு அருகே கரையை கடக்கும். இந்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை நீடிப்பதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!