நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வட மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'

நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
X

வட தமிழக கடலோர பகுதியில் நிலைகொண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலம். (வானிலை ஆய்வு மைய படம்)

வங்காளவிரிகுடாவில் வட தமிழக கடற்கரைக்கு கிழக்கே சுமார் 310 கிலோ மீட்டர் தென்கிழக்கே 290 கிலோமீட்டர் புதுச்சேரியில் இருந்து வடகிழக்கே 270 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் மேற்கு வங்க கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது நாளை காலை சென்னைக்கு அருகில் கரையை கடக்க கூடும்.

சமீபத்திய செயற்கைக்கோள் மற்றும் வானிலை ஆய்வுகளின்படி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது இன்று காலை 08.30 மணி அளவில் வங்காளவிரிகுடாவில் வட தமிழக கடற்கரைக்கு கிழக்கே சுமார் 310 கிலோ மீட்டர் தென்கிழக்கே 290 கிலோமீட்டர் புதுச்சேரியில் இருந்து வடகிழக்கே 270 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இது மேற்கு நோக்கி நகரும் வாய்ப்பு அதிகமாக உள்ளதால் வடமேற்கு திசையில் சென்று வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கரையை 19ஆம் தேதி அதிகாலை கடக்கலாம் என்று வானிலை ஆய்வு மைய தேசிய அறிக்கை வெளியிட்டுள்ளது.

18.11.2021: சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை , இருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன கன மழையும், திருச்சிராப்பள்ளி, கரூர் திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னதுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் பதுவை காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

19.11.2021: திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், இருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னாடன் கூடிய கன முதல் மிக கன கன மழையும், சென்னை , கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னதுடன் கூடிய கன மழையம், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

20.11.2021: கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தார். ஈரோடு, கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னதுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

21.11.2021; தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

22.11.2021: வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை

அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும் அடுக்க 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னதுடன் கூடிய மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா