தோட்டக்கலைத் துறை மூலம் வாகனத்தில் காய்கறி விநியோகம்: எம்.ஆர்.கே.பன்னிர்செல்வம்
தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.அர். கே. பன்னிர்செல்வம் வேளாண் துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கொரோன ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தோட்ட கலை துறையின் மூலம் வாகனத்தில் காய்கறி விநியோகம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர். கே. பன்னிர்செல்வம்,
சென்னை மாநகர முழவதும் எளிதாக மக்கள் பயபடுத்தும் வகையில் வாகனங்களில் காய்கறிகள் வினியோகம் செய்யும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என்றும் துறையின் ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் இணைந்து இந்த திட்டத்தை உருவாக்கி உள்ளனர். சென்னை முழுவதும் 1610 வாகனங்களில் கனிகள் காய்கறிகள் விற்பனை செய்ய திட்டம் சென்னை பொறுத்த வரை 15 மண்டலங்களிலும் எளிதில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும், கோயம்பேடு மொத்த வணிகம் செய்யும் வியாபாரிகள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர் சில்லரை வியாபாரிகள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்
தோட்ட கலை துறை,மற்றும் வேளாண் துறை ,உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் சென்னை முழுவது 1610 காரணங்கள் மூலம் காய்கறி வினியோகம் செய்யப்படும்
சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் 2228 வாகனங்களில் காய்கறி விற்பனை செய்யப்படும். உழவர் சந்தையில் விலை நிர்ணயம் செய்யப்படும் வகையில் காய்கறி விலைகள் நிர்ணயம் செய்யப்படும் . வேளாண் பொருட்களை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் மாவட்ட வேளாண் துறை அதிகாரிகளை அணுகவேண்டும் என்றார். மற்றும் காலை 6 மணி முதல் 12 மணி வரை காய்கறி விற்பனை நடைபெறும் என கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu