விருத்தாசலத்தில் உலக மக்கள் உரிமைகள் கவுன்சில் கலந்தாய்வு கூட்டம்

விருத்தாசலத்தில் உலக மக்கள் உரிமைகள் கவுன்சில் கலந்தாய்வு கூட்டம்
X

விருத்தாசலத்தில் மக்கள் உரிமை கவுன்சில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உலக மக்கள் உரிமைகள் கவுன்சிலின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தனியார் திருமண மண்டபத்தில் உலக மக்கள் உரிமைகள் கவுன்சில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு உலக மக்கள் உரிமைகள் கவுன்சில் கடலூர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.மாநில கவுரவ ஆலோசகர் மாணிக்கம் முன்னிலை வகித்தார்.

கடலூர் மாவட்ட தலைவர் சங்கர்,மாவட்ட பொருளாளர் கலிவரதன்,நகர செயலாளர் ராமகிருஷ்ணன்,நகர ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விழிப்புணர்வு பேச்சாளராக உலக மக்கள் உரிமைகள் கவுன்சிலின் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் துரை கந்தசாமி சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்ச்சியின் இறுதியாக தமிழ்மணி நன்றிஉரை நிகழ்த்தினார்.

மேலும் இக்கூட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்ட தலைவர் நடராஜன்,மாவட்ட செயலாளர் புவனேஸ்வரன்,புதுச்சேரி யூனியன் தலைவர் குமார்,துணைத்தலைவர் ஆனந்தராஜ்,சென்னை மாநில பொருளாளர் சாய்வெங்கட், பத்திரிகையாளர் ரவி,பாலசுந்தர், புகைப்பட கலைஞர் மதன்குமார்,சூரிய பிரகாஷ்,வெங்கடாச்சலம் மற்றும் விருத்தாசலம் நகர பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!