விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
X

விருத்தாசலம், திட்டக்குடி சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை  கோட்டாட்சியர் ராம்குமார் வெளியிட்டார்.

விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கோட்டாட்சியர் ராம்குமார் வெளியிட்டார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் 01.01.2022 ஐ தகுதி நாளாகக் கொண்டு இன்று விருத்தாசலம்,திட்டக்குடி சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.தி.மு.க,பா.ஜ.க, அ.தி.மு.க., காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர் முன்னிலையில் கோட்டாட்சியர் ராம்குமார் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

இதில் 284 வாக்குச்சாவடி மையங்களை கொண்ட விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,26,914 பேரும் பெண் வாக்காளர்கள் 1,28,689 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 29 பேர் உள்ளிட்ட மொத்தம் 2,55,632 வாக்காளர்கள் அடங்குவர்.

248 வாக்குச்சாவடி மையங்களை கொண்ட திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,08,699 பேரும் பெண் வாக்காளர்கள் 1,12,936 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் உள்ளிட்ட மொத்தம் 2,21,038 வாக்காளர்கள் உள்ளனர்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!