விருத்தாசலம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதலர்கள் தஞ்சம்

விருத்தாசலம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதலர்கள் தஞ்சம்
X

விருதாச்சலம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த அருண்குமார், முகில்வாணி.

விருத்தாச்சலம் காவல் நிலைத்தில் பாதுகாப்பு கேட்டு காதலர்கள் தஞ்சம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த இருசாளக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் அருண்குமார்(25). இவரும் வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகள் முகில்வாணி(18) ஆகிய இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் முகில்வாணியின் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அருண்குமார், முகில்வாணி இருவரும் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். இதனையடுத்து விருத்தாச்சலம் காவல் நிலைத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!