விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
X

ஊழியர்களின் போராட்டத்தினால் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி புரியும் ஊழியர்கள் இன்று சிறு விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் மு. சுப்பிரமணியனை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இந்த உத்தரவினை ரத்து செய்ய கோரியும்,ஊராட்சி செயலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான அனைத்து உரிமைகளை வழங்க கோரியும்,பணி மேற்பார்வையாளர் களுக்கான அளவீட்டினை 5 லட்சமாக உயர்த்த கோரியும்,கணினி உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் நிலை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி புரியும் அனைத்து நிலை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் இன்று சிறு விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலக அறைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு