விருத்தாசலம்: மழையால் சேறும் சகதியுமாக மாறிய குடியிருப்பு பகுதி

விருத்தாசலம்: மழையால்  சேறும் சகதியுமாக மாறிய குடியிருப்பு பகுதி
X

விருத்தாசலம் பகுதியில் பெய்த மழையால் குடியிருப்பு பகுதி சேறும் சகதியுமாக உள்ளது.

விருத்தாசலம் பகுதியில் பெய்த மழையால் குடியிருப்பு மற்றும் சாலைகள் சேறும் சகதியுமாக உள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் நேற்று மழை பெய்தது. ராஜேந்திரபட்டினம் ஊராட்சியில் காளியம்மன் கோவில் கிழக்குத் தெருவில் மழையால் வீடுகளிலும் சாலை இருபுறமும் சேறும் சகதியுமாக உள்ள ன. மேலும் சாக்கடை மற்றும் கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்பதால் அதன் மூலம் குழந்தைகள், முதியவர்களுக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்...

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!