விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக தேதி அறிவிப்பு
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக கமிட்டி ஆலோசனை கூட்டம் பெரியநாயகர் சன்னதியில் நடைபெற்றது.
இதில் பிலவ வருடம் தை மாதம் 24ஆம் தேதி 06.02.2022 ஞாயிற்றுக்கிழமை பஞ்சமி திதி ரேவதி நட்சத்திரம் அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கும்ப லக்னத்தில் ஸ்ரீவிருத்தாம்பிகா ஸ்ரீபாலாம்பிகா சமேத ஸ்ரீவிருத்தகிரீஸ்வரர் ஆலய ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செய்ய ஒப்புதல் பெறப்பட்டது.
நடைபெற்ற பணிகள் குறித்து பகிரப்பட்டது.நடைபெற வேண்டிய பணிகள் சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு கும்பாபிஷேக கமிட்டி தலைவர் ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் அகர்சந்த் தலைமை தாங்கினார். தி.மு.க. நகர செயலாளர் தண்டபாணி, காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் நீதிராஜன், முன்னாள் நகர மன்ற தலைவர்கள் மு.வள்ளுவன், வி.கே.முருகன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சுந்தர்ராஜன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் அரங்க பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் வேல்முருகன், நகர துணை செயலாளர் ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அ.தி.மு.க. மாவட்ட பாசறை செயலாளர் ஆர் டி ஆர். ரமேஷ், தே.மு.தி.க. நகர செயலாளர் ரமேஷ், இன்பேண்ட் பள்ளி தாளாளர் விஜயகுமாரி, டாக்டர்கள் சௌந்தரம், நவநீதம், குலோத்துங்கன், வழக்கறிஞர்கள் பாலச்சந்தர், ஜெயக்குமார், சந்திரசேகர் , முருகவேல் , தனவேல், ரவிச்சந்திரன், பி பி எஸ். குழுமத்தினர், நகர வர்த்தகர்கள் நல சங்கத் தலைவர் சண்முகம், பூக்கடை ராஜசேகர், ஜெயா மெடிக்கல் சோமு, குரு பேப்பர் ஸ்டோர் விஸ்வநாதன் , சண்முகா ஜுவல்லரி சண்முகம்,ராமையா, பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் பொன்னுசாமி, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் கிருஷ்ணகுமார், மின்சார வாரிய செயற்பொறியாளர் சுகன்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu