விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் உடனுறை பாலாம்பிகை கோயிலில் மாசி திருவிழா தொடக்கம்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் உடனுறை பாலாம்பிகை கோயிலில் மாசி திருவிழா தொடக்கம்
X

விருத்தாசலத்தில் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் உடனுறை பாலாம்பிகை விருத்தாம்பிகை திருக்கோயில் மாசி மகம் பத்து நாள் திருவிழாவான முதல் நாள் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

விருத்தகிரீஸ்வரர் உடன்னுறை பாலாம்பிகை விருத்தாம்பிகை திருக்கோயில் மாசி மகம் 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

விருத்தாசலத்தில் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் உடனுறை பாலாம்பிகை விருத்தாம்பிகை திருக்கோயில் மாசி மகம் பத்து நாள் திருவிழாவான முதல் நாள் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் உடனுறை விருத்தாம்பிகை பாலாம்பிகை திருக்கோவிலில் மாசிமக திருவிழாவான இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆலயத்தில் உள்ள ஐந்து கொடி மரங்களில் இன்று கொடி ஏற்றப்பட்டது. மாசிமக திருவிழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மாவட்டத்திலிருந்து தரிசனம் செய்வது வழக்கம். இந்த விழாவானது 12 நாள் நடைபெறும்.

இதில் முக்கிய திருவிழாவான ஆறாம் நாள் திருவிழா இந்தக் கோயிலைக் கட்டிய விபசித்து முனிவருக்கு சிவபெருமான் காட்சி அளித்தல் என்ற ஐதீக திருவிழா ஆகும். ஒன்பதாம் நாள் திருவிழா விநாயகர், முருகர், விருதகிரீஸ்வரர் உடனுறை விருத்தாம்பிகை ,பாலாம்பிகை சண்டிகேஸ்வரர் பஞ்சமூர்த்தி வீதி தேர் அனைவரும் பத்தாதா திருவிழா நடைபெறும் பத்தாம் நாள் திருவிழா மாசி மக பெருவிழா வாகவும் பதினாறாம் நாள் தெப்பத்திருவிழாவும் பன்னிரண்டாம் நாள் சண்டிகர் திருவிழா நடைபெறும். தினமும் காளைகள் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும் இரவு சாமி வீதி உலா நடைபெறும்..

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!