/* */

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்

உலக புகழ் பெற்ற விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம். லட்சகணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

HIGHLIGHTS

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
X

உலக புகழ் பெற்ற விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. லட்சகணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

உலக புகழ் பெற்ற விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம். லட்சகணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஹெலிக்காப்டர் மூலம் மலர் தூவ ஏற்பாடு. பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 2000 ஆண்டு பழமையான பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 5 நந்தி, 5 கோபுரங்கள், 5 தீர்த்தம், 5 பிரகாரம், 5 தேர்கள் என அனைத்தும் 5-ஆக அமையப்பெற்றுள்ளது தனிச்சிறப்பாகும். கோவிலில் கடந்த 2002-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதையடுத்து, மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கான விழா கடந்த 27-ந்தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 2-ந்தேதி மணிமுக்தாற்றில் இருந்து யாகசாலை பூஜைக்கு யானை மீது வைத்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. பின்னர் 3-ந்தேதி முதல் கால யாகசாலை பூஜை,நேற்று முன்தினம் 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. நேற்று 4-ம் கால யாகசாலை, 5-ம் கால யாக சாலை பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜை, 5 மணிக்கு பரிகார யாகங்கள், பூர்ணாகுதி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து 7.15 மணிக்கு மேள,தாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று கோவில் கோபுரங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.பின்னர் 8.30 மணிக்கு மூல மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தின் போது மலர் தூவுவதற்கு ஹெலிகாப்டர் மற்றும் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்க நீர் தெளிக்கும் எந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. விழாவில் கலந்து கொள்வதற்காக விருத்தாசலம் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் வந்து குவிந்துள்ளனர்.

கும்பாபிஷேக விழாவில் குற்ற சம்பவங்கள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மேற்பார்வையில் விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின் தலைமையில் சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மெட்டல் டிடெக்டர் மூலம் பக்தர்கள் மற்றும் அவர்களின் உடைமைகளை சோதனை செய்த பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதுதவிர ஆம்புலன்ஸ்,தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன.கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டி குழு தலைவரும், ஜெயின் ஜூவல்லரி உரிமையாளருமான அகர்சந்த், அமைச்சர் சி.வெ.கணேசன்..,எஸ்.எஸ் . சிவசங்கர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்,நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Updated On: 6 Feb 2022 7:44 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  2. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  3. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  4. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  5. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  6. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  7. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. கோவை மாநகர்
    தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலான சாரல் மழை ..