விருத்தாசலம் அருகே அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
குப்பநத்தம் ஊராட்சியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி ஒன்றிய அலுவலகத்தில் பெருந்தலைவர் செல்லத்துரையை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருத்தாசலம் ஒன்றியத்திற்குட்பட்ட குப்பநத்தம் ஊராட்சியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி ஒன்றிய அலுவலகத்தில் பெருந்தலைவர் செல்லத்துரையை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் கடந்த 7 மாதங்களாக குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பலமுறை மனுகொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கிராம பொது மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த அதிமுக ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் செல்லதுரையை சுற்றி வளைத்து சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய சாமாதான பேசுவார்த்தையால் அனைவரும் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu