மூடப்பட்ட அம்பேத்கர் சிலை திரையை விசிக அகற்றியதால் பரபரப்பு

மூடப்பட்ட அம்பேத்கர் சிலை திரையை விசிக அகற்றியதால் பரபரப்பு
X

திரையிட்டு மூடப்பட்ட அம்பேத்கர் சிலையின் திரையை அகற்றும் விசிகவினர் 

நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் திரையிட்டு மூடப்பட்ட அம்பேத்கர் சிலையை விடுதலை சிறுத்தை கட்சியினர் திரையை அகற்றியதால் பரபரப்பு

நகராட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி பேனர்கள், போஸ்டர், கொடிக்கம்பம், சுவர் விளம்பரம் ஆகியவை நகராட்சி நிர்வாகம் அகற்றி வருகிறது. அதேபோல கட்சி தலைவர்களின் சிலைகளும் திரை போட்டு மூடப்படுகிறது.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலையை நகராட்சி ஊழியர்கள் திரையைப் போட்டு மூடினார். அப்போது அங்கு வந்த விடுதலை சிறுத்தை கட்சி நகர செயலாளர் முருகன், தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் தென்றல், தெற்கு ஒன்றிய நிர்வாகி அய்யாதுரை மணலூர் முருகன் ஆகியோர் அம்பேத்கர் சிலையில் போடப்பட்ட திரையை அகற்றினர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!