/* */

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பழங்குடி இருளர் மக்கள் தர்ணா போராட்டம்

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பழங்குடி இருளர் மக்களுக்கு மயான பாதை கேட்டு கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பழங்குடி இருளர் மக்கள் தர்ணா போராட்டம்
X

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்திய பழங்குடியினர் இருளர் சமூக மக்கள்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பரவளூர் கிராமத்தில் பழங்குடி இருளர் சமூக மக்கள் சுமார் 55 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு அக்கிராம பகுதியில் அம்மக்களுக்கு 1.55 சென்ட் மயானத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த மயானத்திற்கு சடலங்களை எடுத்துச் செல்வதற்கான பாதையை மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து பயிர் செய்து வருகின்றனர். இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பயணம் செல்வதற்கு பாதை வசதியை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்து தர வேண்டுமென நீதிமன்ற உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இதுநாள்வரை மனு கொடுத்தும் மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால், பழங்குடியினர் மற்றும் இருளர் சமூக மக்கள் சடலங்களை அக்கிராம மணிமுத்தா ஆற்றிலேயே புதைத்து வருகிறோம். மழைக்காலங்களில் சடலங்கள் நீரில் அடித்துச் செல்வதாகவும், மயானம் இருந்தும் பிணங்களை எடுத்துச்செல்ல பாதை இல்லாததால் அவதியுற்று வருவதாகக் கூறி மயானத்திற்கு செல்ல வழி கேட்டு பழங்குடியினர் இருளர் சமூக மக்கள் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்த பிடிஓ முருகன் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது. பழங்குடி இருளர் பேரவையின் மாநில தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.

விருத்தாசலம் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் தென்றல், நகர செயலாளர் முருகன், தெற்கு ஒன்றிய நிர்வாகி அய்யாதுரை, ஒன்றிய செயலாளர் சுப்பு ஜோதி, மாவட்ட அமைப்பாளர் சடையன் பெயரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை செயலாளர் திராவிடமணி கண்டன உரை நிகழ்த்தினார், விடுதலை சிறுத்தை கட்சியின் மங்கலம்பேட்டை நகர செயலாளர் அம்பேத்கர் , பகுஜன் சமாஜ்வாதி கட்சி செந்தில்குமார் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Jan 2022 12:55 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  2. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  8. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  9. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  10. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்