விருத்தாசலத்தில் திருநங்கைகள் மின்னணு குடும்ப அட்டைக்கான சிறப்பு முகாம்

விருத்தாசலத்தில் திருநங்கைகள் மின்னணு குடும்ப அட்டைக்கான சிறப்பு முகாம்
X

விருத்தாசலத்தில் திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடந்தது.

மூன்றாம் பாலினத்தவர்க்கு புதிய மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் பெரும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் மூன்றாம் பாலினத்தவர்க்கு புதிய மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் பெரும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

வருவாய் வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில்,வட்ட வழங்கல் அலுவலர் பூங்குழலி, இளநிலை வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், தனி வருவாய் ஆய்வாளர் செந்தமிழ்வளவன் மற்றும் கிராம உதவியாளர் அன்வர் பாஷா, லட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்