குடி குடியை கெடுத்தது-விருத்தாசலம் அருகே ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை

விருத்தாசலம் அருகே ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

விருத்தாசலம் அடுத்த ப.எடக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் இவர் விருத்தாசலம் காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.இவரது மனைவி பாக்கியலட்சுமி (40) மகள் திவ்யா இருப்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். மகன் திவாகரன்( 15) கோட்டேரி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

கணவர் பாக்கியராஜ் தொடர்ந்து குடித்துவிட்டு குடும்பத்தில் பிரச்சினை செய்து வந்துள்ளார் இதனால் பாக்கியராஜ் மனைவி பாக்கியலட்சுமி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கணவனை கோவிலுக்குச் அழைத்து சென்று சத்தியம் செய்து கையில் கயிறு கட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழாவில் மீண்டும் பாக்யராஜ் மது அறிந்தி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவரது மனைவி பாக்கியலட்சுமி மகள் மகன் ஆகிய மூவரும் அவரது முந்திரிக்காட்டில் ஆடுகள் மேய்க்க சென்றனர்.

அங்கு மூன்று பேரும் முந்திரி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களது உடலை மீட்டு அவரது வீட்டுக்கு கொண்டு வைத்துள்ளனர். புகாரின் பேரில் ஆலடி போலீசார் 3 பேரின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இது தொடர்பாக பாக்கியராஜை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். குடி குடியை கெடுக்கும் என்பது பழமொழி. குடி பழக்கத்திற்கு அடிமையான பாக்கியராஜ் அதில் இருந்து மீள முடியாமல் போனதால் தோப்பாக வளர வேண்டிய தனது வாரிசுகளையும், அன்பு மனைவியையும் இழந்து தனிமரமாகி போய் விட்டார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மனிதன் கனவு கண்ட காலத்தை இயந்திரம் உருவாக்கும் காட்சி – AIன் காலச்சுவடு!