பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X
விருத்தாசலம் பாலக்கரையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் பாலக்கரை சந்திப்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பிஜி சேகர் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் கனல் கண்ணன், மாநில மதியுரை குழுவின் பாலமுருகன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!