விருத்தாசலத்தில் வருவாய் துறை அலுவலர்களுக்கு நிலவரித் திட்ட பயிற்சி

விருத்தாசலத்தில் வருவாய்  துறை அலுவலர்களுக்கு நிலவரித் திட்ட பயிற்சி
X

விருத்தாசலத்தில் வருவாய் துறையினருக்கு நிலவரி திட்ட பயிற்சி முகாம் தொடங்கியது.

விருத்தாசலத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களுக்கு நிலவரித் திட்ட பயிற்சி முகாம் தொடங்கியது.

சென்னை நில அளவை மற்றும் நிலவரித் திட்டம் இயக்குனர் உத்தரவின் பேரில்,கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களுக்கு நில அளவை மற்றும் நிலவரித் திட்ட பயிற்சி நடைபெற்றது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் மற்றும் கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங்,உதவி இயக்குனர் நில அளவை மற்றும் நிலவரித்திட்டம் திருநாவுக்கரசு அறிவுறுத்தலின்படி,கோட்ட ஆய்வாளர் ராஜசேகர் முன்னிலையில் நான்கு பயிற்சியாளர்களை கொண்டு 14 வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அளவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

முப்பத்தி ஐந்து நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது,இந்நிகழ்ச்சியில் தலைமை நில அலுவலர் ராஜ மகேந்திரன், நகர சார் ஆய்வாளர் பாண்டியன் மற்றும் பயிற்சியாளர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!