டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.65 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் திருட்டு

டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.65 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் திருட்டு
X

டாஸ்மாக் கடையில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு.

விருத்தாசலத்தில் அரசு மதுபான கடையை உடைத்து ரூபாய் 65 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் திருட்டு.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட ஏனதிமேடு பகுதியில் அரசு மதுபான கடையின் பின்பக்க சுவற்றில் துளையிட்டு மர்ம நபர்கள் ரூபாய் 65 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடி சென்றார். இச்சம்பவம் தொடர்பாக விருத்தாசலம் காவல் கண்காணிப்பாளர் மோகன் மற்றும் காவல் ஆய்வாளர் விஜயரங்கன், உதவி ஆய்வாளர் ஆதி, எஸ்பிசிஜடி பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!