பெண்ணாகரம் சுங்கச்சாவடியை அகற்ற கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்
பெண்ணாகரம் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி விருத்தாசலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருத்தாசலம் அடுத்த பெண்ணாகரம் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் உதவி கோட்ட பொறியாளர்,வருவாய் வட்டாட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் மனு அளித்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் பி.ஜி.சேகர்,ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம் சிலம்பரசன்,செந்தாமரை,தங்கவேல், தங்கமணி,தியாகராஜன், சுரேந்தர்.ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொகுதி செயலாளர் அருண்குமார், மாநில நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், பாலசுப்ரமணியன், ஞானசேகரன், சுரேஷ், ஜெயபாலன், பன்னீர்செல்வம் கந்தசாமி, கண்ணபிரான், செந்தில் மற்றும் நகர ஒன்றிய மாவட்ட அணி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu