விருத்தாசலம்: நீரில் மூழ்கி இறந்த மாணவன் குடும்பத்திற்கு அமைச்சர் ஆறுதல்

விருத்தாசலம்: நீரில் மூழ்கி இறந்த மாணவன் குடும்பத்திற்கு அமைச்சர் ஆறுதல்
X

நீரில் மூழ்கி இறந்த மாணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வெளியே வந்தார் அமைச்சர் கணேசன்.

விருத்தாசலம் அருகே நீரில் மூழ்கி இறந்த மாணவன் குடும்பத்திற்கு அமைச்சர் கணேசன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள தீவளூர் கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது மகன் ஆனந்தநாராயணன் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனது நண்பர்கள் ஐந்து பேருடன் தீவளூரில் இருந்து விருத்தாசலம் செல்லும் சாலையில் உள்ள ஓடையில் குளிக்க சென்றுள்ளார்.

அப்போது கரையில் இருந்து தண்ணீரில் உள்ளே குதித்த சிறுவன் அனந்தநாராயணன் திரும்ப வெளியே வரவில்லை. நீண்ட நேரமாக சிறுவன் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த அவனது நண்பர்கள் கிராமத்துக்குள் ஓடி தகவலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து கிராமத்திலிருந்து வந்த இளைஞர்கள் ஓடைக்குள் இறங்கி தேடத் தொடங்கினர்.அப்பொழுது சேற்றுக்குள் சிக்கியிருந்த சிறுவனை மீட்டு வெளியே கொண்டு வந்து பார்த்தபோது சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது.

இந்நிலையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி. வி. கணேசன் உயிரிழந்த மாணவன் வீட்டிற்கு சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறிய பின்பு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட உயிரிழந்த மாணவன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்வில் தி.மு.க. நகர செயலாளர் தண்டபாணி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் அருள்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேஷ், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன்,ஆசிரியர் பக்கிரிசாமி,நகர துணை செயலாளர் நம்பிராஜன்,மாவட்ட பிரதிநிதி ஆட்டோ பாண்டியன், மாணவரணி கார்த்திக், நகர இளைஞரணி மார்க்கெட் பிரபு, முன்னாள் கவுன்சிலர் கர்ணன், 11 வது வட்ட செயலாளர் கணேசன், இளைஞரணி துணைச் செயலாளர் குமார் உள்பட பலர் அமைச்சருடன் சென்றிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!