இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
X

விருதாசலத்தில் நடைபெற்ற இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது நீக்குவோர் தலைமை சங்கம் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநில பொறுப்புத் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

இதில் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்ப்போர் தொழிலாளர்கள் நல வாரியம் என்று சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டு, வாரியத்தில் இணைந்த தொழிலாளர்கள் விபத்தின் மூலம் மரணம் ஏற்பட்டால் இழப்பீடாக 5 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிட்ட அமைச்சர் கணேசனுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் கொரோனா நோயினால் உயிரிழந்த இருசக்கர வாகன பழுது நீக்குவோர் குடும்பங்களுக்கு சங்கத்தின் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.

இதில் மாநில பொதுச் செயலாளர் குமரவேலு,மாநில பொருளாளர் ஜமால் முகமது, மாநில தலைவர் அறிவழகன், மாநில துணை செயலாளர் கோபி, பயிற்சி ஆசான் மாநில ஆலோசகர் அகமது, மாநில ஆலோசகர் மனோகரன், கர்நாடகா மாநிலத் தலைவர், கர்நாடகா மாநில பொதுச் செயலாளர், மாநில செய்தி தொடர்பாளர் சம்பத் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!