விருத்தாசலத்தில் இலங்கை தமிழர்களுக்கு அமைச்சர் கணேசன் நலத்திட்ட உதவி

விருத்தாசலத்தில் இலங்கை தமிழர்களுக்கு அமைச்சர் கணேசன்  நலத்திட்ட உதவி
X

விருத்தாசலத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு அமைச்சர் கணேசன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விருத்தாசலத்தில் இலங்கை தமிழர்களுக்கு அமைச்சர் சி.வெ. கணேசன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இலங்கை தமிழர்களுக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் இலங்கை தமிழர்களுக்கு முதியோர் உதவித்தொகை மூன்று நபர்களுக்கு வழங்கப்பட்டது.சிலிண்டர் இணைப்பு இல்லாத 10 குடும்பங்களுக்கு சிலிண்டர் அதன் உபகரணங்கள் வழங்கப்பட்டது.பாத்திரம் மற்றும் போர்வை உள்ளிட்டவை 75 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் புதிய வீடு கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் சி.வெ. கணேசன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். ஆர். ராதா கிருஷ்ணன்,கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங்,விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் ராம்குமார்,வருவாய் வட்டாட்சியர் சிவக்குமார்,வருவாய் ஆய்வாளர் பழனிவேல்,கிராம நிர்வாக அலுவலர் சுந்தரி மற்றும் தி.மு.க. நகர செயலாளர் தண்டபாணி, நகர இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேஷ், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன்,ஆசிரியர் பக்கிரிசாமி,நகர மாணவரணி கார்த்திக், நகர இளைஞரணி மார்க்கெட் பிரபு, முன்னாள் கவுன்சிலர் கர்ணன்,இளைஞரணி துணைச் செயலாளர் குமார்,நகர தி.மு.க. சார்பில் ராம்சிங்,முரளி,வினோத், ராஜி,நந்தா,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!